Shanmugan Murugavel / 2021 ஜூன் 16 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷுக்கான அவுஸ்திரேலியாவின் சுற்றுப் பயணங்களில் பற் கமின்ஸ், டேவிட் வோர்னர், கிளென் மக்ஸ்வெல் உள்ளிட்ட ஆறு வீரர்கள் பங்கேற்கவில்லை.
இதேவேளை, முழங்கை காயம் காரணமாக இச்சுற்றுப் பயணங்களை ஸ்டீவ் ஸ்மித் தவற விடுகின்றார்.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட வீரர்கள் தவிர ஜஹை றிச்சர்ட்ஸன், கேன் றிச்சர்ட்ஸன், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் இச்சுற்றுப் பயணங்களில் வெவ்வேறுபட்ட தனிப்பட்ட காரணங்கள் காரணமாக பங்கேற்கவில்லை.
இதேவேளை, இச்சுற்றுப்பயணங்களில் பங்கேற்பதிலிருந்து டேனியல் சாம்ஸ் முதலே விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முதற் தடவையாக அவுஸ்திரேலியக் குழாமுக்கு வேகப்பந்துவீச்சாளர் வெஸ் அகர் அழைக்கப்பட்டுள்ளார். தவிர, டான் கிறிஸ்டியன், பென் மக்டர்மூட் ஆகியோரும் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), அஸ்தன் அகர், வெஸ் அகர், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், அலெக்ஸ் காரி, டான் கிறிஸ்டியன், ஜொஷ் ஹேசில்வூட், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், மிற்செல் மார்ஷ், றிலே மெரெடித், பென் மக்டர்மூட், ஜொஷ் பிலிப், மிற்செல் ஸ்டார்க், மிற்செல் ஸ்வப்ஸன், அஸ்தன் தேணர், அன்றூ டை, மத்தியூ வேட், அடம் ஸாம்பா.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago