Shanmugan Murugavel / 2025 நவம்பர் 18 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக காக்க வைக்கப்பட்ட ஸ்பொட்டிபை காம்ஃப் நெளவுக்கு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா திரும்பவுள்ளது. அத்லெட்டிக் பில்பாவோவுக்கெதிரான லா லிகா போட்டியானது காம்ஃப் நெளவில் சனிக்கிழமை (22) விளையாடப்படுமென பார்சிலோனா உறுதிப்படுத்தியுள்ளது.
புனரமைப்பு பணி தொடருகையில் உள்ளூர் சபையிடமிருந்து 45,401 பேருடன் போட்டிகளை நடத்த திங்கட்கிழமை (17) பார்சிலோனா அனுமதியைப் பெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் புனரமைப்புக்காக காம்ஃப் நெள மூடப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு முடிவில் காம்ஃப் நெளவுக்கு பார்சிலோனா திரும்புவதே திட்டமாக இருந்தது. ஒக்டோபரில் 25,991 பேருடன் போட்டிகளை நடாத்த அனுமதி கிடைத்தபோதும், அப்போடு உடனடியாக காம்ஃப் நெளவுக்க திரும்புவது வருமானகரமானதாக இருக்கவில்லை.
பணியானது 2027 முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு அப்போது 105,000 பேர் கொள்ளளவு உடையதாக இருக்கும்.
20 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
4 hours ago
5 hours ago