Editorial / 2018 ஜூன் 05 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}


இடம்பெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸா, உலகின் நான்காம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.
தனது நான்காவது சுற்றுப் போட்டியில், உக்ரேனின் லெசியா டிசுரெங்கோவை நேற்று எதிர்கொண்ட கர்பைன் முகுருஸா, முதலாவது செட்டில் 2-0 என முன்னிலை வகித்தபோது காயம் காரணமாக லெசியா டிசுரெங்கோ போட்டியிலிருந்து விலக காலிறுதிப் போட்டிக்கு கர்பைன் முகுருஸா தகுதிபெற்றார்.
இதேவேளை, உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை தனது நான்காவது சுற்றில் எதிர்கொள்ளவிருந்த 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், காயம் காரணமாக குறித்த போட்டியிலிருந்து விலக மரியா ஷரபோவா காலிறுதிப் போட்டிக்கு நேற்று தகுதிபெற்றார்.
இந்நிலையில், உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கர்சியா, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 2-6, 3-6 என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து நேற்று வெளியேறினார்.
மரின் சிலிச், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-4, 6-1, 3-6, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பபியோ பொக்னியை வென்று காலிறுதிப் போட்டிக்குநேற்று தகுதிபெற்றார்.
இந்நிலையில், நடப்புச் சம்பியனான ஸ்பெய்னின் ரபேல் நடால், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் ஜேர்மனியின் மக்ஸிமில்லியன் மார்டெரரை வென்று காலிறுதிப் போட்டிக்கு நேற்று தகுதிபெற்றிருந்தார்.
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago