2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கால்பந்து லீக்குகள் கைகோர்ப்பது அதிகரிப்பு

Editorial   / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்கூட்டியே தேர்தலை நடத்தி கால்பந்து நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக   எங்களுடன் உள்ள அனைத்து லீக்குகளுக்கும்  என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன எனத் தெரிவித்த, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்  ஜஸ்வர் உமர் மேலும் 4 கால்பந்து லீக்குகள்  தனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது என்றார்.

2022 செப்டம்பர் 22 ஆம் திகதி  நடைபெற்ற  விசேட பொதுச் சபைக் கூட்டத்தில் 61 லீக்குகளில் 13 லீக்குகள் வாக்களிக்கவில்லை. 48 லீக்குகள்  ஆதரவாக வாக்களித்தன.

புதிய யாப்பிற்கு  ஆதரவாக, வாக்களிக்காத 13 லீக்குகளில், மேலும் 4 லீக்குகள் இலங்கை கால்பந்தில் தற்போது நிலவும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர தம்முடன் கலந்துரையாடியதாகவும், 61 லீக்குகளில் 52 லீக்குகள் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும்   என்று சுட்டிக்காட்டியுள்ளதாக ஜஸ்வர் உமர் வலியுறுத்தினார். 

குறிப்பாக தற்போதுள்ள கால்பந்து நிர்வாகம், மற்ற எதிரான தரப்பு மற்றும் லீக்குகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் கால்ப்பந்தாட்டத்துறையின் மேம்பாட்டுக்காக உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றாலும்  ஒப்பந்தங்களை எட்டுகிறது, ஆனால் மற்ற எதிர் கட்சிகள் எதிரான தரப்பும் சில லீக்குகளும் தமது தனிப்பட்ட நலனுக்காக செயற்படுகின்றன என்றார்.

இதனால் உதைபந்தாட்ட   தேர்தல் மேலும் காலதாமதமாகும். இதனால் கால்பந்தாட்ட நிர்வாக விவகாரங்களில் மேலும் சிக்கல்  ஏற்படும் எனவும் ஜஸ்வர் உமர்  தெரிவித்துள்ளார்.

மேலும் உதைபந்தாட்டத் தேர்தல்கள் நடைபெறாத காரணத்தினால் இலங்கையில் கால்பந்தாட்டம் நாளுக்கு நாள் நெருக்கடியை நோக்கி செல்வதாக  இந்த லீக்குகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 கால்பந்தாட்ட நெருக்கடியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து விரைவாக தேர்தலுக்கு செல்வதே இந்த லீக்குகளின் நோக்கமாக உள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .