Editorial / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தான் இடுப்பு சத்திரசிகிச்சை மேற்கொண்டு ஓராண்டுக்குப் பின்னர் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான அன்டி மரே, தனது கிரான்ட் ஸ்லாம் மீள்வருகையை நிகழ்த்தவுள்ளதாக அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஏற்பாட்டாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
உடற்றகுதியை மீள அடைவது தொடர்பில் மெதுவாகப் பணியாற்றிவரும் பிரித்தானியாவின் அன்டி மரே, ஒரு வாரத்துக்கு முன்னர் 503ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்து தற்போது 289ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் காலிறுதிப் போட்டி வரையில் முன்னேறியிருந்த மூன்று கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த அன்டி மரே, நேற்று இடம்பெற்ற ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் இக்னாசியோ லொன்டெரோவை வென்றிருந்தார்.
இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட இரண்டாம்நிலைத் தரப்படுத்தலுடன் பிரதான போட்டி அட்டவணைக்கு 32 வயதான அன்டி மரே திரும்புவார் என அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐந்து தடவைகள் முன்னேறியபோதும் இன்னும் அன்டி மரே சம்பியனாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னதான செய்தியாளர் மாநாட்டில், தனது இடுப்பிலுள்ள வலி தாங்க முடியாமல் இருப்பதன் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரைத் தொடர்ந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
18 minute ago
43 minute ago
5 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
5 hours ago
27 Jan 2026