2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் அணியில் இருவருக்கு கொரோனா

Editorial   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சாணக்க, விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ், ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

குசல் மெண்டிஸின் விக்கெட் காப்பாளர் பொறுப்பை தி​னேஷ் சந்திமல் எடுத்துள்ளார்.

இலங்கை அணி புறப்படுவதற்கு முன்னரே, சாமிக கருணாரத்னவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. அவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றார். இவர்,  அவுஸ்திரேலியாவை நோக்கி, இன்றிரவு பயணிக்கவுள்ளார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில், ஐந்து போட்டிக்களைக் கொண்ட டி-20 போட்டிகள் பெப்ரவரி 11ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X