Editorial / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், அனா புஞ்சிஹேவா எதிர்வரும் மே 9ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1996ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய சமயத்தில், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக அனா புஞ்சிஹேவா செயற்பட்டிருந்தார்.
எனினும் அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் திலங்க சுமத்திபாலவிடம் தோல்வியடைந்த அனா, கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கொல்ப் விளையாட்டில் ஆர்வம் காட்டினார்.
எனினும் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் போட்டியிடுமாறு பல்வேறுத் தரப்பினரும் அனா புஞ்சிஹேவாவுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுத் தொடர்பில் தாம் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அனா புஞ்சிஹேவாத் தெரிவித்துள்ளார்.
28 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
55 minute ago
1 hours ago