2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிரெனடாவிடம் தோற்றது பார்சிலோனா

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இப்பருவகாலத்தில் லா லிகா தொடருக்கு தரமுயர்த்தப்பட்டிருந்த கிரெனடாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா தோல்வியைத் தளுவியது.

தமதணித்தலைவரும் நட்சத்திர முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி, அண்மைய போட்டிகளில் பிரகாசித்திருந்த இளம் முன்களவீரரான அன்சு ஃபாட்டி இல்லாமல் இப்போட்டியை ஆரம்பித்திருந்த பார்சிலோனா, தமது பின்களவீரர் ஜூனியர் ஃபிர்போ தமது அரைப்பகுதியில் பந்தை இழந்ததைத் தொடர்ந்து கிரெனடாவின் மத்தியகளவீரர் றமொன் அஸீஸ் போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே தலையால் முட்டிக் கோலாக்கிய நிலையில் போட்டியின் ஆரம்பத்திலேயே பார்சிலோனா பின்தங்கியது.

இரண்டாவது பாதியில் லியனல் மெஸ்ஸி, அன்சு ஃபாட்டியை பார்சிலோனாவின் முகாமையாளர் எர்னெஸ்டோ வல்வேர்டே அறிமுகப்படுத்தியது அவ்வணியின் ஆட்டத்தை மேம்படுத்தியபோதும், போட்டியின் 66ஆவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய பார்சிலோனாவின் மத்தியகளவீரர் அர்துரோ விடால் பந்தைக் கையால் கையாண்டது காணொளி உதவி மத்தியஸ்தர் அமைப்பு மீளாய்வில் தெரியவந்திருந்த நிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை கிரெனடாவின் முன்களவீரர் அல்வரோ வடில்லோ கோலாக்கிய நிலையில் இறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற செல்டா விகோவுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் அத்லெட்டிகோ மட்ரிட் முடித்திருந்தது.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் 10 புள்ளிகளுடன் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தில் கிரெனடா காணப்படுகின்றது. செவில்லா, அத்லெட்டிகோ மட்ரிட்டும் தலா 10 புள்ளிகளுடன் காணப்படுகின்றபோதும் கோலெண்ணிக்கை அடிப்படையில் அவை இரண்டாம், மூன்றாம் இடங்களில் முறையே அவை காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .