Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் பிறீமியர் லீக்கின் ஐந்தாவது பருவகாலத்தில் கிறிஸ் கெய்லின் அதிரடிச் சதம் கைகொடுக்க, பங்களாதேஷ் பிறீமியர் லீக்கில் ரங்பூர் றைடர்ஸ் சம்பியனாகியது.
டாக்காவில், நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டாக்கா டைனமைட்ஸின் அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் ரங்பூர் றைடர்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ரங்பூர் றைடர்ஸ், 20 ஓவர்களில், ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில், கிறிஸ் கெய்ல், 18 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 146 (69), பிரெண்டன் மக்கலம் ஆட்டமிழக்காமல் 51 (43) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், வீழ்த்தப்பட்ட விக்கெட்டை ஷகிப் அல் ஹஸன் கைப்பற்றினார்.
குறித்த இனிங்ஸில் 18 ஆறு ஓட்டங்களைப் பெற்ற கிறிஸ் கெய்ல், 2013ஆம் ஆண்டு இந்தியன் பிறீமியர் லீக் போட்டியொன்றில் 17 ஆறு ஓட்டங்களைப் பெற்று, இருபதுக்கு – 20 போட்டிகளின் இனிங்ஸொன்றில் தனிநபரொருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஆறு ஓட்டங்கள் என்ற தனது சாதனையத் தானே தகர்த்தார். குறித்த போட்டியில் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கிறிஸ் கெய்ல் கொடுத்த பிடியெடுப்பொன்றை ஷகிப் அல் ஹஸன் தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 207 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டாக்கா டைனமைட்ஸ், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜஹ்ருல் இஸ்லாம் 50 (38), ஷகிப் அல் ஹஸன் 26 (16), எவின் லூயிஸ் 15 (09) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இசுரு உதான, நஸ்முல் ஹஸன், ஷொகக் கஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அணித்தலைவர் மஷ்ரபி மோர்தஸா, ருபெல் ஹொஸைன், ரவி பொப்பாரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் கிறிஸ் கெய்ல் தெரிவானார்.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025