2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

கொழும்பில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நிறுத்திய பூச்சிகள்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தானுக்கிடையேயான பெண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியானது பூச்சிகளைக் கலைப்பதற்காக புகையூட்டப்பட்ட்டிருந்தபோது 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன்னரும் பூச்சிகளை கலைப்பதற்காக இதற்கு முன்னரும் ஒரு தடவை வேறு முறைகள் காணப்பட்டிருந்த நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

புகையூட்டப்பட்டது சிறிது நேரத்துக்கே பயனளித்த நிலையில், மைதானத்தில் ஒளிக் கோபுரங்களை பூச்சிகள் ஆக்கிரமத்து போட்டி மீண்டும் ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே அவை மீண்டும் வந்திருந்த நிலையில் போட்டியில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.

பாகிஸ்தானின் ரமீன் ஷமிமின் கண்ணிலிருந்து பூச்சி அகற்றப்பட்டிருந்ததுடன், பாகிஸ்தானின் அணித்தலைவி பாத்திமா சனா, நஷ்ரா சந்து ஆகியோர் தமது ஆடைகளின் மீதும் பந்துவீசும் பகுதியிலும் பூச்சிகளை விரட்டும் தூவலை மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .