Editorial / 2025 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

இராணுவ மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் கோலூன்றிப் பாய்தல் போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் அருண்தவராசா புவிதரன் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (19) மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் 5.18 மீற்றர் உயரம் பாய்ந்தே தேசிய சாதனை படைத்தார். இதன்போது அவர் கோலூன்றிப் பாய்தலில் இராணுவ சாதனையையும் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் அவர் 2024 இல் 5.17 மீற்றர் உயரம் பாய்ந்து படைத்த தேசிய சாதனையையே தற்போது முறியடித்துள்ளார்.
அப்போதும் அவர் இராணுவ மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியின்போதே சாதனை படைத்திருந்தார். முன்னதாக இந்த மாத ஆரம்பத்தில் நடந்த 103 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் புவிதரன் 5.5 மீற்றர் உயரம் பாய்ந்து போட்டிச் சாதனை படைத்திருந்தார்.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன் தற்போது இராணுவ விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவம் செய்து தேசிய போட்டிகளில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
21 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
32 minute ago
36 minute ago