2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சீகா ஆபத்துக்கு மத்தியிலும் ஒலிம்பிக்கின் இடம் மாறாது

Shanmugan Murugavel   / 2016 மே 29 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் றியோ டி ஜெனீரோ நகரில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை, அங்கிருந்து இடமாற்ற வேண்டுமென விடப்பட்ட கோரிக்கைகளை, உலக சுகாதார ஸ்தாபனம் நிராகரித்துள்ளது.

சீகா வைரஸ் காரணமாக, றியோ நகரிலிருந்து ஒலிம்பிக் போட்டிகள் வெளியேற்றப்பட வேண்டுமென, சர்வதேச வைத்தியர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் என, சுமார் 150 பேர் கையெழுத்திட்டு, இந்தக் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

சீகா காரணமாக பிரேஸிலில் மிக அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நகரமான றியோவில், இப்போட்டிகளை நடத்துவது, பொறுப்பற்றது எனவும் நீதியற்றது எனவும் தெரிவித்த அவர்கள், இன்னமும் இவ்வைரஸ் பரவாத ஆபிரிக்கா, தெற்காசியா போன்ற வலயங்களுக்கு இது பரவுவதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்திருந்தனர். எனினும், றியோவிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளை இடமாற்றுவது, சீகா பரவுவதில் பெருமளவு தாக்கத்தைச் செலுத்தாது என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தது.

'தற்போதைய மதிப்பீட்டின்படி, ஒலிம்பிக் 2016இனை இல்லாது செய்வதோ அல்லது அதன் இடத்தை மாற்றுவதோடு, சர்வதேச ரீதியில் சீகா பரவுவதில் கணிசமானளவு மாற்றாது" எனத் தெரிவித்த அந்த ஸ்தாபனம், இந்தப் போட்டிகள் இடம்பெறும் காலம், பிரேஸிலின் குளிர்காலத்தில் இடம்பெறவுள்ளதால், நுளம்புகளின் நடவடிக்கைகள் குறைவாக இருக்குமெனவும், எனவே நுளம்புகளால் கடியுறுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்குமெனவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .