2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சீகா ஆபத்துக்கு மத்தியிலும் பிரேசிலில் நடால்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியோ பகிரங்க டென்னிஸ் தொடர் இவ்வாரம் பிரேசிலில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், சீகா வைரஸ் தொடர்பில் தனக்கு அச்சமில்லை என டென்னிஸ் தரவரிசையில், உலகில் ஐந்தாம் நிலையில் உள்ள ஸ்பெயின் வீரரான ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

சீகா வைரஸை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த, இத்தொடரை வெல்பவர்களில் முன்னிலையில் உள்ள நடாலும் சகநாட்டு வீரரான, தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ள டேவிட் பெரரும் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

காலையிலும் மாலையிலும் தான் வெளியே செல்லும்போது, நீளக் கை ஆடையையும் நீளக் கால் ஆடையையும் அணியவுள்ளதாக, இத்தொடரை வெல்பவர்களில் இரண்டாமிடத்தில் காணப்படும் 33 வயதான பெரர் தெரிவித்துள்ளார். தவிர, முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் முயற்சிப்பதாகவும் ஆனால், அதிக கவனத்துடன் இருக்கப்போவதில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரவில் நான் வெளியே செல்வேன் என்றும் நான் பயப்படவில்லையென்றும் நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை என்றும் இது நடந்தால், அது துரதிர்ஷ்டம் என்றும் 29 வயதான நடால் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .