Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹஷிம் அம்லா , ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விரைவாக 6,000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய அணிக்கெதிரான இன்றைய போட்டியில் 15 ஓட்டங்களைக் கடந்த போதே, அவர் இச்சாதனையைப் புரிந்தார்.
தனது 123ஆவது இனிங்ஸில் 6,000 ஓட்டங்களைக் கடந்த அவர், 136 இனிங்ஸ்களில் கடந்து இதற்கு முன்னைய சாதனையைக் கொண்டிருந்த விராத் கோலியின் சாதனையையே முறியடித்தார்.
இதற்கு முன்னர், 5,000 ஓட்டங்கள், 4,000 ஓட்டங்கள், 3,000 ஓட்டங்கள், 2,000 ஓட்டங்கள் ஆகியவற்றையும் அம்லாவே விரைவாகக் கடந்திருந்தார்.
இன்றைய போட்டியில் அம்லா, 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
30 minute ago
41 minute ago