2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

சீன கிரான்ட் பிறிக்ஸை வென்றார் றொஸ்பேர்க்

Shanmugan Murugavel   / 2016 ஏப்ரல் 17 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய சாரதியான லூயிஸ் ஹமில்டன், சீன கிரான்ட் பிறிக்ஸை இறுதியாக ஆரம்பித்து, முதல் சுற்றிலேயே உடைந்த முன் செட்டையினால் பாதிக்கப்பட்டு ஐந்து தடவை தரித்து ஏழாம் இடத்தையே பெற்றிருந்த நிலையில், சக அணி வீரரான ஜெர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க் 2016ஆம் ஆண்டில் தனது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியை சீன கிரான்ட் பிறிக்ஸில் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், நிக்கோ றொஸ்பேர்க்கை பின்தள்ள வேண்டுமெனில் இப்பருவகாலத்தில் மிகுதியாகவுள்ள 18 பந்தயங்களில் அவரை விட 36 புள்ளிகள் அதிகமாகப் பெறவேண்டியுள்ளது.

இதேவேளை, சக பெராரி அணி வீரரான பின்லாந்துச் சாரதியான கிமி றைக்கோனனுடன் முதலாவது சுற்றில் மோதியிருந்தாலும் ஜெர்மனியச் சாரதியான செபஸ்டியான் விட்டல் இறுதியில் இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார். ரெட் புல் அணியின் ரஷ்ய சாரதியான டேனியல் கிவ்யட் மூன்றாமிடத்தினைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .