Shanmugan Murugavel / 2016 மே 19 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான மைக்கல் பிளட்டினி, தனது பதவியிலிருந்து இம்மாதம் இராஜினாமாச் செய்திருந்த நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி, தனது புதிய தலைவரை ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவு செய்யவுள்ளது.
பிரஞ்சுக்காரரான 60 வயதான பிளட்டினி, அவர் மீது விதிக்கப்பட்டிருந்த கால்பந்தாட்ட செயற்பாடுகளில் பங்குபற்றுவதற்கான தடையை நீக்க முடியாமற் போனதையடுத்து கடந்த 9ஆம் திகதி தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்திருந்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதிக்கு முதல் சமர்பிக்க வேண்டும் என்ற நிலையில், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் உபதலைவர்களில் ஒருவரான நெதர்லாந்து கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மைக்கல் வான் பிராக், தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் தவிர, ஸ்லோவேனியா சம்மேளனத்தின் தலைவரான அலெக்ஸான்டர் சீஃபெரின், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய உப தலைவரான ஸ்பெய்னின் ஏஞ்சல் மரியா விலாரும் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .