2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

செல்சியை வென்றது பரிஸ் ஸா ஜேமா

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெறும் சம்பியன்ஸ் லீக்கின், இறுதிப் பதினாறு அணிகளுக்கான விலகல் முறையிலான சுற்றின் கடந்த செவ்வாய்க்கிழமை (16), இடம்பெற்ற முதலாவது போட்டியில் பரிஸ் ஸா ஜேமா அணி வெற்றி பெற்றுள்ளது.

பரிஸ் ஸா ஜேமா, செல்சி அணிகளுக்கிடையில் பரிஸ் ஸா ஜேமா அணியின் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது சுற்றுப்போட்டியில், பரிஸ் ஸா ஜேமா அணி, 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

போட்டி ஆரம்பித்து 39ஆவது நிமிடத்தில், பரிஸ் ஸா ஜேமா அணியின் நட்சத்திரவீரர் ஸல்டான் இப்ராமோவிக்கின் கோலின் மூலம் அவ்வணி முன்னிலை பெற்றது. எனினும் முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் செல்சியின் ஜோன் மைக்கல் ஒபி பெற்ற கோலின்மூலம் கோல் எண்ணிக்கை சமமானது. எனினும் மாற்றுவீரராகக் களமிறங்கிய எடின்சன் கவானி, அஞ்செல் டி மரியாவிடமிருந்து பந்தைப் பெற்று, போட்டியின் 78ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின்மூலம் அவ்வணி வெற்றி பெற்றது.

போட்டியின் நாயகனாக ஸல்டான் இப்ராமோவிக் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதேவேளை, மேற்படி இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டி, எதிர்வரும் ஒன்பதாம் திகதி, செல்சி அணியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .