Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் சம்பியன்களாக, ஜெமினி அரேபியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. லியோ லயன்ஸ் அணிக்கெதிரான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, ஜெமினி அரேபியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெமினி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜஸ்டின் கெம்ப் ஆட்டமிழக்காமல் 32 (29), குமார் சங்கக்கார 30 (26), றிச்சர்ட் லீவி 21 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பிடல் எட்வேர்ட்ஸ், ஸ்கொட் ஸ்ட்ரைரிஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லியோ அணி, 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹேமிஷ் மார்ஷல் 46 (40), பிரையன் லாரா 28 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நவீட் உல் ஹஸைன் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, கைல் மில்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முத்தையா முரளிதரன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக நவீட் உல் ஹஸைனும், இத்தொடரின் நாயகனாக குமார் சங்கக்காரவும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .