Shanmugan Murugavel / 2016 மே 31 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பந்தை வீசியெறிகிறார் என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமின்ட எரங்க மீது, உத்தியோகபூர்வக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது போட்டியின் முடிவைத் தொடர்ந்தே, இந்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியின் நடுவர்களாக அலீம் தார், எஸ். ரவி ஆகியோர் செயற்பட்டதுடன், போட்டி மத்தியஸ்தராக அன்டி பைக்றொப்ட் செயற்பட்டிருந்தார்.
இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமின்ட எரங்க, பந்தை வீசியெறியும் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை, இதுவே முதற்தடவையாகும்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிகளின்படி, இவ்வாறு குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டு 14 நாட்களுக்குள் ஒருவரது பந்துவீச்சைச் சோதனைக்குள்ளாக்க வேண்டும். சோதனை முடிவு வெளிவரும்வரை, குறித்த பந்துவீச்சாளர் தொடர்ந்தும் பந்துவீச முடியும்.
இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான தம்மிக்க பிரசாத், துஷ்மந்த சமீர ஆகியோரை இழந்துள்ள இலங்கை, தற்போது ஷமின்ட எரங்கவையும் இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .