2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சம்பியனானார் ஜோக்கோவிக்

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 31 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக, சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் தெரிவாகியுள்ளார். பிரித்தானியாவின் அன்டி மரேயைத் தோற்கடித்தே, அவர் சம்பியன் பட்டம் வென்றார்.

உலகின் முதல்நிலை வீரரான ஜோக்கோவிச், உலகின் முன்னாள் முதல்நிலை வீரரும் தற்போதைய மூன்றாம் நிலை வீரருமான ரொஜர் பெடரரை, அரையிறுதியில் வைத்து 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான அன்டி மரே, கனடாவின் மிலோஸ் றோவோனிக்கை, 4-6, 7-5, 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

சிறப்பான போர்மை இப்போட்டியில் வெளிப்படுத்திய நொவக் ஜோக்கோவிச், 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் முதலாவது செட்டைக் கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட்டில், 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற அவர், முக்கியமான மூன்றாவது செட்டை, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி, சம்பியன் பட்டம் வென்றார்.

இது, அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் அவர் பெறும் 6ஆவது சம்பியன் பட்டம் என்பதோடு, ஒட்டுமொத்தமாக, அவரது 11ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாகும். கடந்தாண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அன்டி மரே, அப்போட்டியிலும் நொவக் ஜோக்கோவிச்சிடம் தோல்வியடைந்திருந்த நிலையில், மீண்டுமொருமுறை தோல்வியடைந்தார்.

முன்னதாக, பெண்கள் ஒற்றையர் போட்டிகளில், உலகின் முதல்நிலை வீராங்கனையான செரினா
வில்லியம்ஸைத் தோற்கடித்து, ஜேர்மனியின் அஞ்செலிக் கேர்பரும் ஆண்கள் இரட்டையர் போட்டிகளில் ஜேமி மரே, புருனோ சோரஸ் ஜோடீயம், பெண்கள் இரட்டையர் போட்டிகளில் மார்ட்டினா ஹிங்கிஸ், சானியா மிர்ஸா ஜோடியும் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற அன்டி மரே, அப்போட்டியிலும் நொவக் ஜோக்கோவிச்சிடம் தோல்வியடைந்திருந்த நிலையில், மீண்டுமொருமுறை தோல்வியடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .