Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் முதலாவது பருவகாலத்தின் சம்பியன்களாக, இஸ்லாமாபாத் யுனைட்டெட் அணி தெரிவாகியுள்ளது. குவேட்டா கிளேடியேட்டர்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, அவ்வணி சம்பியன் பட்டம் வென்றது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இஸ்லாமாபாத் யுனைட்டெட் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குவேட்டா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் அஹ்மட் ஷெஷாத் 64 (39), குமார் சங்கக்கார 55 (32) ஓட்டங்களைக் குவித்தனர். பந்துவீச்சில் அன்ட்ரே றசல் 3, மொஹமட் இர்பான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலளித்தாடிய இஸ்லாமாபாத் யுனைட்டெட் அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் டுவைன் ஸ்மித் 73 (51), பிரட் ஹடின் ஆட்டமிழக்காமல் 61 (39) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக டுவைன் ஸ்மித்தும், தொடரின் நாயகனாக ரவி போப்பாராவும் தெரிவாகினர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago