2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

சம்பியன்ஸ் லீக்கில் வேறு அணிக்காக வார்டி விளையாடலாம்

Shanmugan Murugavel   / 2016 மே 25 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியன்களான லெய்செஸ்டர் அணி சார்பாகச் சிறப்பான திறமையை இப்பருவகாலத்தில் வெளிப்படுத்திய ஜேமி வார்டி, இன்னோர் அணிக்காக சம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் ஊடகமே இத்தகவலை வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில், 1 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜேமி வார்டி, இப்பருவகாலத்தில் 24 கோல்களைப் பெற்று, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். தற்போது, லெய்செஸ்டர் அணி, சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், அத்தொடரில் அவர் விளையாடுவாரென்ற எதிர்பார்ப்புக் காணப்படுகிறது.

ஆனால், டெய்லி மெய்ல் வெளியிட்டுள்ள தகவலின்படி, இவ்வாண்டு பெப்ரவரியில் வார்டி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தின்படி, 20 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்கு, சம்பியன்ஸ் லீக் தொடரில் இன்னோர் அணிக்காக விளையாடுவதற்கான ஏற்பாடுகள் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் போதே, அவரது ஊதியம், வாரமொன்றுக்கு 80,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களாக உயர்த்தப்பட்டிருந்தது. அவரது ஒப்பந்தத்தில் காணப்படும் இந்த விடயத்தை அறிந்துகொண்ட மன்செஸ்டர் சிற்றி உள்ளிட்ட கழகங்கள், அதுகுறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .