Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் சிற்றிக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற போட்டியில் எந்தவித கோல்களையும் பெறாது சமநிலையில் போட்டியை முடித்துக் கொண்ட லெய்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
விறுவிறுப்பாக இடம்பெற்ற மேற்படிப் போட்டியில், இரு அணிகளுக்கும் கோல் பெறும் சந்தர்ப்பங்கள் இருந்திருந்தும் கோல்காப்பாளர்கள் கஸ்பர் சூமைக்கல் மற்றும் ஜோ ஹார்ட் ஆகியோர் அபாரமாகச் செயற்பட்டு பல தடுப்புக்களை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் தனித்து எவரும் இல்லாத நிலையில் லெய்செஸ்டர் சிற்றியின் நட்சத்திர வீரர் ஜேமி வர்டிக்கு கோல் போடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அதை அவர் கோல்கம்பத்துக்கு மேலால் அடித்ததோடு, மறுபுறம் பனால்டி பகுதிக்குள் கிடைத்த வாய்ப்பொன்றை சிற்றியின் சேஜியோ அகுரோ தவறவிட்டிருந்தார்.
இதேவேளை கெண்டக் கால் பின் தசையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக இன்னுமோர் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு மன்செஸ்டர் சிற்றி அணித்தலைவர் வின்சென்ட் கொம்பனி, போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என மன்செஸ்டர் சிற்றியின் பயிற்சியாளர் மனுவல் பெலிகிரினி தெரிவித்துள்ளார்.
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
28 minute ago
39 minute ago