Shanmugan Murugavel / 2026 மே 10 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்ற செல்சியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் சமப்படுத்தியது.
லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை றயான் கிரவென்பேர்ச் பெற்றதோடு, செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை என்ஸோ பெர்ணாண்டஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை சதர்லேண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் சமப்படுத்தியது.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 76 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது. 74 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மன்செஸ்டர் சிற்றியும் 65 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் மன்செஸ்டர் யுனைட்டெட்டும் 59 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லிவர்பூலும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட ஆர்சனலும் சிற்றியும் தலா ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
2 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago