Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 16 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற கைகரியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற நாப்போலியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லேஸியோ சமப்படுத்தியது. லேஸியோ சார்பாக குஸ்டாவ் இஸக்ஸென், பூலாயி டியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜியாகொமோ றஸ்படோரி பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 56 புள்ளிகளுடன் நாப்போலி காணப்படுகின்றது. 54 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலனும், 51 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 46 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் லேஸியோவும் காணப்படுகின்றன. இதில் மற்றைய அணிகளை விட இன்டர் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.
24 minute ago
30 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
43 minute ago