Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், செல்டா விகோவுக்குமிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
அத்லெட்டிகோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லூயிஸ் சுவாரஸ் பெற்றிருந்தார். செல்டா விகோ சார்பாக, சன்டி மினா, பெளகுன்டோ பெரைரா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில், 51 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் அத்லெட்டிகோ உள்ளது. 43 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் பார்சிலோனா உள்ளது. நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டும் 43 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை அடிப்படையில் மூன்றாமிடத்திலுள்ளது. 42 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் செவில்லா உள்ளது. ஏனைய அணிகளை விட அத்லெட்டிகோ ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
36 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
36 minute ago
1 hours ago
3 hours ago