2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சமநிலையில் இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள் தொடர்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 03 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான தொடரானது சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், அன்டிகுவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், 0-0 என தொடரானது சமநிலையில் முடிவடைந்தது.

நான்காம் நாளை, தமது இரண்டாவது இனிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 29 ஓட்டங்களுடன் ஆரம்பித்திருந்த இலங்கை, நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய லஹிர்ரு திரிமான்னேயை 39 ஓட்டங்களுடன் அல்ஸாரி ஜோசப்பிடம் இழந்தது.

பின்னர் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவும், ஒஷாத பெர்ணான்டோவும் விக்கெட்டுகளை பாதுகாத்த நிலையில், 75 ஓட்டங்களுடன் கைல் மேயர்ஸிடம் திமுத் கருணாரத்ன வீழ்ந்தார்.

இறுதியில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வரும்போது 2 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை தமது இரண்டாவது இனிங்ஸில் இலங்கை பெற்றிருக்க, ஒஷாத பெர்ணான்டோ 66, தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்களுடன் களத்திலிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக கிறேய்க் பிறத்வெய்ட்டும், தொடரின் நாயகனாக சுரங்க லக்மாலும் தெரிவாகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .