Editorial / 2020 ஒக்டோபர் 04 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லீட்ஸ் யுனைட்டெட்டின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும் மன்செஸ்டர் சிற்றிக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஹீம் ஸ்டேர்லிங்க் பெற்றதோடு, லீட்ஸ் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பெற்றிருந்தார்.
இதேவேளை, எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுக்குமிடையிலான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் வென்றது. எவெர்ற்றன் சார்பாக, ஜேம்ஸ் றொட்றிகாஸ் இரண்டு கோல்களையும், டொமினிக் கல்வேர்ட்-லூயின், யெரி மினா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியன் சார்பாக, நீல் மெளபே, யெவ்ஸ் பிஸோமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் கிறிஸ்டல் பலஸுக்குமிடையிலான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது. செல்சி சார்பாக, ஜோர்ஜினியோ இரண்டு கோல்களையும், பென் சில்வெல், கேர்ட் ஸூமா ஆகியோர் தலஅ ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026