Shanmugan Murugavel / 2026 மார்ச் 22 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற சஸுலோவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது.
ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெனான் யில்டிஸ் பெற்றதோடு, சஸுலோ சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரயா பினமொந்தி பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 68 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் இன்டர் மிலன் காணப்படுகின்றது. 63 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஏ.சி மிலனும், 62 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி காணப்படுகின்றது. கொமோ, ஜுவென்டஸ் ஆகியன தலா 54 புள்ளிகளைப் பெற்றபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின்படி நான்காம், ஐந்தாமிடங்களில் காணப்படுகின்றன. இதில் கொமோவும், இன்டரும் ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளன.
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
28 minute ago
36 minute ago