Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகங்களான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், நியூகாசில் யுனைட்டெட்டுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை பிரென்னன் ஜோன்சன் பெற்றதுடன், நியூகாசில் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹார்வி பார்ன்ஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை போர்த்துக்கல் கழகமான போர்ட்டோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில் ஐக்கிய அமெரிக்காவில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற பிறீமியர் லீக் கழகங்களான மன்செஸ்டர் யுனைட்டெட், எவெர்ற்றனுக்கிடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்திருந்தது.
38 minute ago
47 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
55 minute ago