Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச்சின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், அர்மினியா பிலபெல்டுக்குமிடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பயேர்ண் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, கொரென்டின் டொலிஸோ, அல்போன்ஸோ டேவிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அர்மினியா சார்பாக, மிஷெல் விளாப், அமொஸ் பைபர், கிறிஸ்டியன் ஜெபயுயர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில், 49 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர்ண் உள்ளது. 44 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும், 39 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்க்பேர்ட்டும், நான்காமிடத்தில் வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்குமுள்ளன. வொல்வ்ஸ்பேர்க்கும் 39 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும், கோலெண்ணிக்கை அடிப்பைடையில் நான்காமிடத்திலுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
38 minute ago
2 hours ago
4 hours ago