Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில், பெல்ஜியத்தில் நேற்று நடைபெற்ற பெல்ஜியம், ஐவரிகோஸ்ஸ்டுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை மிச்சி பச்சுவாய் பெற்றதோடு, ஐவரிகோஸ்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பிராங்க் கெஸி பெற்றிருந்தார்.
இதேவேளை, இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து, வேல்ஸுக்கிடையேயான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து சார்பாக, டொமினிக் கல்வேர்ட்-லூயின், கொனர் கோடி, டனி இங்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற ரஷ்யா, சுவீடனுக்கிடையிலான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடன் வென்றது. சுவீடன் சார்பாக, அலெக்ஸான்டர் இஸாக், மத்தியாஸ் ஜொஹன்ஸன் ஆகியோர் தலா ஒவ்வ்வொரு கோலைப் பெற்றனர். ரஷ்யா சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்டர் சொபொலெவ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .