Shanmugan Murugavel / 2021 நவம்பர் 17 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ணத் தொடரில், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய தகுதிகாண் போட்டிகளில், வேல்ஸில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், பெல்ஜியத்துக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
பெல்ஜியம் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெவின் டி ப்ரூனே பெற்றதோடு, வேல்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கைஃபர் மூர் பெற்றிருந்தார்.
இதேவேளை, நெதர்லாந்தில் நடைபெற்ற நோர்வேயுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற நெதர்லாந்து, உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றது. நெதர்லாந்து சார்பாக, ஸ்டீவன் பெர்ஜ்விஜ்ன், மெம்பிஸ் டிபே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago