2025 மே 21, புதன்கிழமை

சமநிலையில் லிவர்பூல் – சிற்றி போட்டி

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 04 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், லிவர்பூலின் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற அவ்வணிக்கும், நடப்புச் சம்பியன்கள் மன்செஸ்டர் சிற்றிக்கும் இடையிலான போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

லிவர்பூல் சார்பாக, சாடியோ மனே, மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். சிற்றி சார்பாக, பில் பொடென், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி சமப்படுத்தியது. லெய்செஸ்டர் சார்பாக, கெலச்சி லெகாஞ்சோ, ஜேமி வார்டி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கிறிஸ்டல் பலஸ் சார்பாக, மிஷெல் ஒலிஸே, ஜெஃப்ரே ஸ்கல்ப் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X