2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

சம்பியனான சம்மாந்துறை பிரதேச சபை

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

"ஒரு ஆற்றல் மிக்க குடிமகன் ஒரு வெற்றிகரமான நாடு" என்ற அரசாங்கத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு விளையாட்டு வார நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

ஜூலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினத்துடன் இணைந்ததாக ஜுலை 26 முதல் ஜூலை 31 வரை நாடளாவியரீதியில் இத்திட்டத்தை செயல்படுத்தியிருந்தது. 

அதனை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநோகபூர்வ மென்பந்தாட்ட கிரிக்கெட்  தொடரானது சம்மாந்துறை மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (30) நடைபெற்றபோது இறுதிப் போட்டியில் சம்மாந்துறை வைத்தியசாலை அணியை வென்று சம்மாந்துறை பிரதேச சபை அணி சம்பியனானது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .