Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவை யுனைட்டெட் வென்றுள்ளது.
யுனைட்டெட் சார்பாக, மார்க்கஸ் றஷ்ஃபோர்ட், ஹரி மக்குவாயா, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லாண்டா சார்பாக, மரியோ பஸ்காலிச், மெரி டெமிரல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026