Shanmugan Murugavel / 2026 ஜனவரி 21 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், நோர்வேக் கழகமான பொடோ/ஜிலிம்டின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை றயான் செர்கி பெற்றதோடு, பொடோ/ஜிலிம்ட் சார்பாக கஸ்பர் ஹோஹ் இரண்டு கோல்களையும், ஜென்ஸ் பீற்றர் ஹக் ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை போர்த்துக்கல் கழகமான ஸ்போர்டிங் லிஸ்பனின் மைதானத்தில் இன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது. பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிவிச்சா கவச்செலியா பெற்றதோடு, ஸ்போர்டிங் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் லூயிஸ் சுவாரஸ் பெற்றிருந்தார்.
இந்நிலையில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆர்சனல் சார்பாக கப்ரியல் ஜெஸூஸ் இரண்டு கோல்களையும், விக்டர் ஜோக்கரிஸ் ஒரு கோலையும் பெற்றதோடு, இன்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை பீற்றர் சுசிச் பெற்றிருந்தார்.
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago