Shanmugan Murugavel / 2021 நவம்பர் 25 , பி.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்ட் வெளியேற்றப்பட்டுள்ளது.
போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங்கின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு சி போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் டொட்டமுண்ட் தோல்வியடைந்ததையடுத்தே தொடரிலிருந்து வெளியேற்றப்பட, ஸ்போர்ட்டிங் இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஸ்போர்டிங்க் சார்பாக, பெட்ரோ கொன்கல்வேஸ் இரண்டு கோல்களையும், பெட்ரோ பொரோ ஒரு கோலையும் பெற்றதோடு, டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொன்யெல் மலென் பெற்றிருந்தார்.
இந்நிலையில், மோல்டோவாக் கழகமான ஷெரிஃப்பின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு டி போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், விலகல் முறையிலான சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. மட்ரிட் சார்பாக, டேவிட் அலபா, டொனி க்றூஸ், கரிம் பென்ஸீமா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, ஸ்பானியக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலன் வென்றது. மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜூனியர் மெஸ்ஸியாஸ் பெற்றிந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு ஏ போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றிருந்தது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிலியான் மப்பே பெற்றதோடு, சிற்றி சார்பாக ரஹீம் ஸ்டேர்லிங்க், கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago