Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வெளியேற்றப்பட்டுள்ளது.
நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட்டுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முந்தையதான விலகல் முறையிலான சுற்றில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து சிற்றி வெளியேறியது.
தமது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த சிற்றி, ஸ்பானிய லா லிகா கழகமான மட்ரிட்டின் மைதானத்தில் வியாழக்கிழமை (20) அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து 3-6 என்ற மொத்த கோல் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் கிலியான் மப்பே பெற்றதோடு, சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை நிக்கோ கொன்ஸலேஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வி ஐந்தோவனிடம் 3-4 என்ற மொத்த கோல் கணக்கில் தோற்று தொடரிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் வெளியேறியது.
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago