2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

சர்ச்சையான முனீபா அலியின் ரண் அவுட்

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, பாகிஸ்தானுக்கெதிரான பெண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியின்போது பாகிஸ்தானின் முனீபா அலியின் ரண் அவுட்டானது சிறிது தாமதத்தை பாகிஸ்தானின் இனிங்ஸின்போது ஏற்பட்டுத்தியிருந்தது.

முனீபா களத்தை விட்டு வெளியேறாமல் எல்லைக்குள் இருந்த நிலையில், ரண் அவுட் முடிவை பாகிஸ்தான் கேள்விக்குட்படுத்தியிருந்தது.

இந்தியாவின் கிரந்தி கெளட் வீசிய பந்தை துடுப்பெடுத்தாடும் பகுதிக்கு முன்னர் இருந்து ஆட முனீபா முயன்றபோது பந்து அவரின் காலின் பட, இந்தியா எல்.பி.டபிள்யூ கோரிக்கையை முன்வைத்திருந்தது.

கோரிக்கை முன்வைக்கையில் எல்லைக்குள் துடுப்பை வைத்திருந்த முனீபா பின்னர் தீப்தி ஷர்மா ஸ்லிப்பில் இருந்து பந்தை எறிந்தபோது துடுப்பை மேலே தூக்கிய நிலையில் தீப்தியின் எறியில் விக்கெட்டுகள் தகர்ந்திருந்தது.

விதிமுறைகளின்படி இது அவுட் என்ற நிலையில் முனீபா முதல் துடுப்பை எல்லைக்குள் வைத்ததைப் பார்த்து ஆட்டமிழப்பில்லையென அறிவித்த மூன்றாவது நடுவர் பின்னர் முனீபா துடுப்பை தாக்கியதைப் பார்த்து ஆட்டமிழப்பென வழங்கியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .