Editorial / 2017 ஓகஸ்ட் 28 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், பொருத்தமற்ற கருத்தை முன்வைத்தமைக்காக, எச்சரிக்கப்பட்டுள்ளார்.
எனினும், இந்த எச்சரிக்கையோடு, அவருக்கு 1 தண்டனைப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2 தண்டனைப் புள்ளிகளைக் கொண்டிருந்த அவர், தற்போது 3 தண்டனைப் புள்ளிகளுடன் காணப்படுகிறார்.
4ஆவது தண்டனைப் புள்ளியை அவர் பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் அல்லது 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியவற்றில் தடைசெய்யப்படுவார்.
மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் 101ஆவது ஓவரில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை, 4 ஓட்டங்களுக்கு ஷாய் ஹோப் அடித்தார். அதன்போதே, பொருத்தமற்ற கருத்துகளை பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்தினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
08 Apr 2026