2025 மே 17, சனிக்கிழமை

சிங்கம் ஆடுகிறது: தடுக்கிறது கங்காரு

Editorial   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 14ஆவது சுற்றுப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

இந்தப் போட்டிக்கு சாமிக்க கருணாரத்ன மற்றும் லஹிரு குமார அழைக்கப்பட்ட நிலையில், இலங்கை அணியில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடிய தசுன் ஷனக மற்றும் மத்திஷ பத்திரன அணியில் இடம் இழந்துள்ளனர்.

இலங்கை அணி:

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் சசங்க, தனஞ்சய டி சில்வா, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, மஹிஷ் தீக்ஷன, டில்ஷான் மதுசங்க மற்றும் லஹிரு குமாரசங்க

 அவுஸ்திரேலிய அணி:

மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மனுஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இன்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹெஷெல்வுட் மற்றும் ஆடம் சம்பா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .