Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளரான பீற்றர் சிடில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தான தனது ஓய்வை இன்று அறிவித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு அறிமுகமான 35 வயதான பீற்றர் சிடில், 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30.66 என்ற சராசரியில் 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதுதவிர, 20 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள பீற்றர் சிடில், இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் மாநில அணியான விக்டோரியாவுக்காகவும், இங்கிலாந்து கவுண்டியான எஸெக்ஸுக்காகவும், அவுஸ்திரேலிய உள்ளூர் இருபதுக்கு – 20 போட்டித் தொடரான பிக் பாஷ் லீக்கில் அடிலெய்ட் ஸ்ரைக்கர்ஸுக்காகவும் பீற்றர் சிடில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago