2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வேக் குழாமில் இங்கிலாந்து வீரர்

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 05 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயர்லாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 தொடருக்கான சிம்பாப்வேக் குழாமில் இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர் கரி பலன்ஸ் இடம்பெற்றுள்ளார்.

இறுதியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்காக விளையாடிய 33 வயதான பலன்ஸ், 2006ஆம் ஆண்டு 19 வயதுக்குட்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் சிம்பாப்வேயை பிரதிநிதித்துவப்படுத்திருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரக இருபதுக்கு – 20 தொடரில் விளையாடுவது காரணமாக சிகண்டர் ராசாவுக்கு இக்குழாமில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் பிளஸிங்க் முஸர்பனி காயம் காரணமாக குழாமில் இடம்பெறாததோடு, றெஜிஸ் சகப்வா, மில்டன் ஷும்பா ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், துடுப்பாட்டவீரர்கள் இனொசென்ட் கையாவும், தடிவனஷே மருமனியும், வேகப்பந்துவீச்சாளர் விக்டர் நயுச்சியும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: கிறேய்க் எர்வின் (அணித்தலைவர்), கரி பலன்ஸ், றயான் பேர்ள், தென்டாய் சட்டாரா, பிராட்லி இவான்ஸ், லுக் ஜொங்வி, இனொசென்ட் கையா, கிளைவ் மடன்டே, வெஸ்லி மட்ஹெவெரே, தடிவனஷே மருமனி, வெலிங்டன் மஸகட்ஸா, டொனி முன்யொங்கா, றிச்சர்ட் நகரவா, விக்டர் நயுச்சி, ஷோன் வில்லியம்ஸ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .