2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிம்பாப்வேக்கெதிராக ஆதிக்கம் செலுத்தும் தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 01 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், புலவாயோவில் சனிக்கிழமை (28) ஆரம்பித்த இப்போட்டியின் மூன்றாம் நாளை தமது இரண்டாவது ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த தென்னாபிரிக்கா, வியான் முல்டரின் 147, அணித்தலைவர் கேஷவ் மஹராஜ்ஜின் 51, கோர்பின் பொஷ்ஷின் 36, கைல் வெரைனின் 36 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் வெலிங்டன் மஸகட்ஸா 4, தனகா சிவங்கா 2, வின்சென் மஸெகெஸா 2, வெஸ்லி மட்ஹெவெரே 1, பிளஸிங்க் முஸர்பனி 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் 537 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்வே, மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் பிறின்ஸ் மஸ்வோரே ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளார். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை பொஷ் கைப்பற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .