2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

சிம்பாப்வேக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த இலங்கை, ஹராரேயில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே, பென் கர்ரனின் 79 (95), சிகண்டர் ராசாவின் ஆட்டமிழக்காத 59 (55), கிளைவ் மடன்டேயின் 36 (36) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 3, அசித பெர்ணாண்டோ 2, ஜனித் லியனகே மற்றும் டில்ஷான் மதுஷங்க தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 278 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் 122 (136), அணித்தலைவர் சரித் அசலங்கவின் 71 (61) ஓட்டங்களோடு 49.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் பிராட் இவான்ஸ், றிச்சர்ட் நகரவா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, எர்னெஸ்ட் மஸுகு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் நிஸங்க தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .