Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேயை சர்வதேச கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் விளையாடுவதற்கான இந்தியாவுக்காக சுற்றுப்பயணத்தை சிம்பாப்வே தவறவிடுகின்றது.
அந்தவகையில், சிம்பாப்வேயை இலங்கை மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பிரதியிட்டுள்ள நிலையில், குறித்த தொடரின் போட்டிகளானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஐந்தாம், ஏழாம், 10ஆம் திகதிளில் இடம்பெறவுள்ளது.
சிம்பாப்வேயை சர்வதேச கிரிக்கெட் சபை இடைநிறுத்தியுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையைத் தாம் அழைத்துள்ளதாக ஊடக வெளியீடொன்றில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி நடைபெறும் இடங்களாக கெளகாத்தி, இந்தூர், பூனே ஆகியன இறுதி செய்யப்பட்டுள்ளன.
எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தில் கீழ் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் சிம்பாப்வே விளையாடுவதாக இருந்திருந்தது.
இந்நிலையில், குறித்த சுற்றுப்பயணம் இடம்பெறாத நிலையில் சிம்பாப்வே கிரிக்கெட் சபையுடன் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரொன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பேரம்பேசிருந்தது.
இதேவேளை, எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின்படி அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் தம்நாட்டில் இலங்கைக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக சிம்பாப்வே இருக்கின்ற நிலையில், இது திட்டமிட்டபடி இடம்பெறுமா எனத் தெரியவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago