Shanmugan Murugavel / 2021 மே 27 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களுக்கு கதவு இன்னும் மூடப்படவில்லை என நேற்று முன்தினம் தெரிவித்துள்ள இலங்கையணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர், ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் மீள்வருகையொன்றை அவர்கள் புரியலாமெனக் கூறியுள்ளார்.
பங்களாதேஷுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில் முன்னாள் அணித்தலைவர்கள் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன உள்ளிட்டோரை இலங்கை சேர்க்காத நிலையில், பங்களாதேஷுக்கெதிரான முதலாவது இரு தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் தோல்வியை இலங்கை சந்தித்திருந்தது.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ஆர்தர், நீக்கம் என்பது கடுமையானதெனக் கூறியதுடன், சிரேஷ்ட வீரர்களில்லாமல் தாங்கள் முன் செல்லக்கூடிய வழியொன்றைப் பார்த்ததாகவும், நீக்கமெதுவில்லையென்றும், எக்காலப் பகுதியிலும் அவர்கள் மீள வரலாமெனக் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago