2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறந்த வீரராக லெவன்டோஸ்கி

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 18 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் சிறந்த வீரராக, ஜேர்மனியின் புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் றொபேர்ட் லெவன்டோஸ்கி நேற்றுத் தெரிவாகியுள்ளார்.

கடந்த புண்டெலிஸ்கா பருவகாலத்தில் 41 கோல்களைப் பெற்ற 33 வயதான லெவன்டோஸ்கி, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரரான லியனல் மெஸ்ஸி, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலா ஆகியோரைத் தாண்டியே சிறந்த வீரராகத் தெரிவிவாகியிருந்தார்.

இந்நிலையில், ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் மத்தியகள வீராங்கனையான அலெக்ஸியா புடெல்லாஸ்ஸே சிறந்த வீராங்கனையாகத் தெரிவாகியிருந்தார்.

இதேவேளை, இத்தாலிய சர்வதேச கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளரான றொபேர்ட்டோ மன்சினி, பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் முகாமையாளர் பெப் குவார்டியோலாவைத் தாண்டி, சிறந்த பயிற்சியாளராக இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முகாமையாளரான தோமஸ் துஷெல் தெரிவானார்.

இந்நிலையில், சிறந்த கோல் காப்பாளராக செல்சியின் எடுவார்ட் மென்டி தெரிவாகினார். இத்தாலியின் கோல் காப்பாளர் ஜல்லூயிஜி டொன்னருமா, மியூனிச்சின் மனுவல் நோயரைத் தாண்டியே இவ்விருதை மென்டி வென்றிருந்தார்.

சிறந்த பதினொருவர் அணி பின்வருமாறு,

  1. ஜல்லூயிஜி டொன்னருமா, 2. டேவிட் அலபா, 3. ருபென் டயஸ், 4. லியனார்டோ பொனுச்சி, 5. ஜோர்ஜினியோ, 6. என் கலோ கன்டே, 7. கெவின் டி ப்ரூனே, 8. கிறிஸ்டியானோ ரொனால்டோ, 9. எர்லிங் பிறோட் ஹலான்ட், 10. றொபேர்ட் லெவன்டோஸ்கி, 11. லியனல் மெஸ்ஸி.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X