2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

சிற்றியிலிருந்து விலகிய எடெர்சன்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 03 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியிலிருந்து துருக்கியக் கழகமான பெனர்பாச்சேக்கு சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சன் சென்றுள்ளதாக சிற்றி செவ்வாய்க்கிழமை (02) அறிவித்துள்ளது.

போர்த்துக்கல் கழகமான பெய்ஃபிக்காவிலிருந்து 2017ஆம் ஆண்டு சிற்றியில் இணைந்த 32 வயதான எடெர்சன் ஆறு பிறீமியர் லீ, சம்பியன்ஸ் லீக் உள்ளடங்கலாக 18 கிண்ணங்களை சிற்றியில் வென்றிருந்தார்.

பெனெர்பாச்சேயானது ஏறத்தாழ 12 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு எடெர்சனைக் கைச்சாத்திட்டதாகக் கூறப்படுகிறது. பருவகாலத்துக்கு 12.9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஊதியமாக எடெர்சன் பெறவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .